BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலம் தொட்டபெட்டா காட்சி முனை ஆகும்.இங்கு நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து செல்வர்.இந்த நிலையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சூழலில் உதகை கோத்தகிரி செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா ஜங்சன் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனே இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து மரத்தை வெட்டி அகற்றினர் இதனால் சுமார் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சிலர் மலைப்பாதையில் நடந்து செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS