நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்ததுறையும் அவிரா அறக்கட்டளை நிறுவனர் ஐஸ்வர்யா தேவ் மற்றும் கோவை பி எஸ் ஜி கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சாலையோரம் உள்ள வனப்பகுதியில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியின் போது குன்னூர் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
CATEGORIES நீலகிரி