நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
இதில் அந்தப் பகுதி சேர்ந்த பொதுமக்களும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் அன்று 18 வழித்தடமாக இருந்த நிலையில் தற்பொழுது கூடலூரை சேர்ந்த சில பகுதிகளும் இணைக்கப்பட்டு 42 வழிதடமாக வனத்துறையினர் வரவு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தாங்களை வெளியேற்றுவதற்காக சதி நடப்பதாக தொடர்ந்து பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட மணி வர்மா என்ற இளைஞர் கூடலூர் அருகே BSNL டவர் மீது அரசு மக்களை விரட்டுவதற்காக சதி செய்கிறது என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தற்பொழுது அங்கு வந்த சூழ்நிலையில் டவரில் இருந்து இறங்குமாறு இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய நிலையில் அவர் தொடர்ந்து மருத்து வருகிறார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் அந்த வழித்தடத் திட்டத்தை திரும்ப பெரும் வரை இறங்கப் போவதில்லை என அவர் உறுதியாக கூறி தொடர்ந்து டவர் மீது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.