நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 19 நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு என்னும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எவ்வாறு 20.04.2024 அன்று பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்ததோ அவ்வாறு இருப்பதை நேரில் பார்வையிட்டு, முழுமையாக திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் திமுக, அதிமுக,பிஜேபி,
நாம் தமிழர் கட்சி, அம்பேத்கர் பார்ட்டி ஆப் இந்தியா,சுயேட்சை உள்ளிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா இ.ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
CATEGORIES நீலகிரி