BREAKING NEWS

நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடயேற்றத்துடன் தொடங்கபட்டது.அதனைத் தொடர்ந்து சிம்மா வாகனம், மயில்வாகனம், சந்திர பிறப்பை, அன்ன வாகனம்,ரிஷப வாகனம்,கைலாச வாகனம்,யானை வாகனம் போன்றவற்றில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று வெகு விமர்சியாக மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. இதில் மணிகண்டேஸ்வரர் அஞ்சனாச்சி அம்பாள் ஆகியோரை சிறப்பு அலங்காரத்துடன் தேரில் வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து வளம்பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர்.இதில் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்….

Share this…

CATEGORIES
TAGS