நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிராமப் பகுதிகளில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தது திமுக அரசு.மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமேயானால்100 நாள் வேலைத் திட்டத்தில் 150 நாட்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் ஊதியம் பெற்று தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். சிலிண்டர் 500 ரூபாயாகவும் பெட்ரோல் விலை 75 ரூபாயாகவும் குறைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என கூறி வாக்கு சேகரித்தார்…
