BREAKING NEWS

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் நடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றது

வரும் திங்கட்கிழமை 17ஆம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இறைவனுக்கு இஸ்லாமியர்கள் கால்நடைகளை குர்பானி கொடுப்பது வழக்கம் மேலும் அன்று வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஏழைகளுக்கு அசைவு உணவு மற்றும் இனிப்பு வழங்கி அவர்களை சிறப்புப்படுத்துவார்கள்.

இன்று நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தையில் வேலூர் மாவட்டத்தில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், ஜமுனாபாரி ஆடுகள்,சேலம் கருப்பாடுகள், பல்லாடு,நெல்லூர் கிடா ஆடுகள்,ஆகிய பல்வேறு ரக ஆடுகள் என 500-க்கும் மேற்பட்ட விற்பனைக்கு வந்தன வந்தது.

சிறிய ரக ஆடுகள் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் பெரிய ஆடுகள் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

இன்று நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும் கடந்து திங்கட்கிழமை நடைபெற்றது போல் இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS