BREAKING NEWS

படப்பிடிப்பில் சமந்தா காயமடைந்தாரா?… என்ன நடந்தது: படக்குழு விளக்கம்!

படப்பிடிப்பில் சமந்தா காயமடைந்தாரா? என்ன நடந்தது: படக்குழு விளக்கம்!

படப்பிடிப்பில் சமந்தா காயமடைந்தாரா?... என்ன நடந்தது: படக்குழு விளக்கம்!

’குஷி’ படப்பிடிப்பில் நடிகை சமந்தா காயமடைந்ததாக வந்த செய்தி பற்றி படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் படம், ’குஷி’. தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி முரளி ஒளிப்பதிவு செய்கிறார். ஹிஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிசம்பர் 23-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடந்து வந்த இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் ’குஷி’ படப்பிடிப்பின்போது, விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்ததாகவும், இதில் இருவரும் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாயின. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் செய்தியை படக்குழு மறுத்துள்ளது.

‘விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் படப்பிடிப்பில் காயமடைந்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மொத்தப் படக்குழுவும் ஹைதராபாத்துக்கு பத்திரமாகத் திரும்பிவிட்டது’ என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )