BREAKING NEWS

பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா

சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா சட்ட ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 750 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பொது பாதையில் இரண்டாம் ஆண்டு தேரை இழுத்து வந்தனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருந்த நிலையில் கடந்த 2015 ஆண்டு பட்டியல் இன மக்கள் பொதுப்பாதையில் தேரை இருப்பது தொடர்பாக இரு வேறு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தேர் திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது ஆண்டாக தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில்,சட்ட ஒழுங்குப் பிரச்சினை எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ்,மருத்துவர்கள் உட்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 750 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் பொதுப்பாதையில் தேரை இழுத்து வந்தனர் தேர் முக்கிய வீதியின் வழியாக மேளதாளங்கள் முழக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டியலின பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இழுத்து வந்தனர். இதனால் முத்துமாரியம்மன் திருத்தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. இருப்பினும் திருவிழா என்றால் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் குறவன் குறத்தி பாட்டுக் கச்சேரி ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்காததும் எங்களுக்கு வருத்தம் தான் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சிலர் புலம்பிக்கொண்டதையும் கேட்க முடிந்தது

CATEGORIES
TAGS