பட்டியல் இன மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் புறக்கணிக்கும் ஊராட்சி மன்ற தலைவர். மற்றும் அரசு அதிகாரிகள்.
விருத்தாசலம் அருகே பட்டியல் இன மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் புறக்கணிக்கும் ஊராட்சி மன்ற தலைவர். மற்றும் அரசு அதிகாரிகள்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளுர் புதுகாலனி பட்டியல் இன மக்கள் வசிக்கும்
பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதியோ ?, வடிகால் வசதியோ ?, குடிநீர் வசதியோ ? மயான பாதிக்கு செல்லும் பாதையை சாலை சரி செய்யாமல் இருப்பதால். உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தராததால், நாள்தோறும் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளம் போல் சாலையில் தேங்கி நிற்பதால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாஅருளரசனிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.