பண்ருட்டியில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதுமின் கட்டண உயர்வு எங்களுக்கு ஷாக் அடிக்கிறது என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது இவர் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஷாக்கு கொடுத்து வருகிறார் என பண்ருட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி கேள்வி
தேசிய ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு வாக்களித்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்திரா காந்தி சாலையில் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு வாக்களித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுச் செயலாளர் ஜீவாவினோத்குமார் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசியவர் பாரத நாட்டின் மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி சிறப்பான ஆட்சி செய்து வருவதாக கூறினார் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் கள்ளச்சாராயம் கஞ்சா கட்ட பஞ்சாயத்து தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதாக கொலை கொள்ளை என சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் மேலும் பால் விலை மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.