பண்ருட்டி அருகே உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
பண்ருட்டி அருகே உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு, மற்றும் பணிக்கன்குப்பம் ஆகிய இடங்களில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளது.இங்குள்ள தூய இருதய மரியன்னை ஆலய திருவிழாவில் பங்குத்தந்தை இரட்சகர் தலைமையில் திருப்பலி கொடியேற்றம் செய்யப்பட்டு தேர் பவனி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதே போல பணிக்கன்குப்பம் புனித விண்ணரசி அன்னை ஆலயத்திலும் வானவேடிக்கையுடன் தேர் பவானி தேவாலயத்தின் வளாகத்தை சுற்றி வந்து தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கிறிஸ்துவ பாதிரிய போதகர்கள் முன்னிலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் கிறிஸ்தவ பாதிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பண்ருட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அசம்பாவிதங்கள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்