பண்ருட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மற்றும் அங்கு செட்டிப்பாளையம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடலூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் கொக்குபாளையம் சிவா மற்றும் அவைத்தலைவர் சந்தானம் ஆகியோர் முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வரின்ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பேருந்தில் பயணம் செய்த இனிப்புகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் மாவட்ட ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்