பண்ருட்டி அருகே 9 கோடி வரை முறைகேடு 64 கிலோ மனுக்களை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்
பண்ருட்டி அருகே 9 கோடி வரை முறைகேடு 64 கிலோ மனுக்களை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர் !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அக்கடவல்லி கிராமத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருப்பவர் ராஜேஸ்வரி. ஊராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வந்த பார்த்தசாரதி என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கழிப்பிடம் கட்டும் திட்டம் என பல்வேறு பல்வேறு அரசன் திட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பகண்டை ஊராட்சி எழுத்தர் ஏழுமலை, பிரபாகரன் ஆகியோர் சுமார் ஒன்பது கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாகவும்,
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரை மனு அளித்தும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 64 கிலோ மனுக்களுடன் அக்கடவல்லி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி இதுவரை கொடுக்கப்பட்ட மனுக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் புகார் அளித்தார்.
பத்து நாட்களில் உரிய தீர்வு எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார். 64 கிலோ மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வார்டு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.