பண்ருட்டி குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சரியாக 9 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ அய்யனார் அப்பனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது
இதனைக்கான சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கும்பாபிஷேக ஏற்பாடுகளை குடியிருப்பு வடக்கு தெரு வாசிகள் செய்திருந்தனர்.
மேலும் கூட்ட நெரிச்சல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு முத்தாண்டி குப்பம் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.