பண்ருட்டி வி. கே. டி. சாலையில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சித்திரைச்சாவடி பகுதியில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் இடையில் போடப்படும் வி.கே.டி.சாலை பணி 10 ஆண்டுகளை கடந்தும் முடியாமல் உள்ளது. இந்த நிலையில்கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி. செல்லும் பிரதான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரும்சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.பொதுமக்கள் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, வி.கே.டி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் பண்ருட்டி வியாபாரி சங்கம் முந்திரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் லாரி உரிமையாளரும் சங்கம் சார்பில் ஜல்லி கொட்டும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் அகில இந்திய முந்திரி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நகர கவுன்சிலர் வெங்கடேசன் லாரி உரிமையாளர் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பண்ருட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பானில் ஈடுபட்டனர்.