பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 நபர்களிடமிருந்து ரூபாய் 13 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாயை வசூல் செய்துள்ளார்.
ஆனால் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் பணத்தை மோசடி செய்து கையாடல் செய்து ள்ளார். இது குறித்து பைனான்ஸ் அதிகாரி கிரண் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி வழிகாட்டுதலின்படி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட ரஜினி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.