பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலாந்தாய்வு கூட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் பொறுப்புகுழு தலைவர் ரஃபிக் தலைமையில் மாலை 5.00 மணிக்கு பத்தமடையில் நடைபெற்றது. பத்தமடை நகர தலைவர் ஷெரிப் வரவேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மதுஷபி , வர்த்தகர்அணி மாவட்ட தலைவர் அம்பை ஐலில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான், மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா , மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் எம்.எஸ். சிராஜ், ஆகியயோர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி.கே.புரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, விரவநல்லூர், வெள்ளாங்குழி, சேரன்மகாதேவி, பத்தமடை, ஆகிய பகுதிகளின் நகர தலைவர், நகர செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர், இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற மே மாதம் 23 கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தற்போதுள்ள மழை காலங்களை பயன்படுத்தி மழைநீரை சேமிக்க பொருட்டு அம்பைக்கு உட்பட்ட கால்வாய் மற்றும் குளங்களின் கரைகளை தூர்வாரி மழைநீரை சேமிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடைவடிக்கை எடுக்க வேண்டும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக பத்தமடை நகர செயலாளர் ஆதம்பாவா நன்றி கூறினார