BREAKING NEWS

பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம்

வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர்

விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரைக்கு இணையாக சித்திரை பெருவிழாவானது சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் கள்ளழகர் வேடமடைந்து மண்டுக முனிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காகவும் மற்றொருபுறம் விருத்ரா சூரனை வதம் செய்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தை விளக்கி சாப விமோசனம் அளிப்பதற்காக வெட்டிவேருடன் கூடிய பல்வேறு வண்ண நறுமண மலர்களால் அங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் சுந்தரராஜ பெருமாள் கள் அழகர் வேடமடைந்து மக்கள் வெள்ளத்தில் புஷ்பப் பள்ளக்கில் நீந்தியவாறு அரக்கு கலந்த சிவப்பு பட்டுடுத்தி வெள்ளி கிண்ணத்தில் அவுளுடன் கலந்த பால் பாயசத்தை அருந்தியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனால் நல்ல மழை பொழிவு ஏற்படும் எனவும் விவசாயம் செழிக்கும் எனவும் நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

 

அப்போது அழகர் கள்ள கொண்டை என்று சொல்லக்கூடிய சவுரி முடியை வைத்துக் கொண்டு ஜப்புத்தாடு என்று சொல்லக்கூடிய குத்திட்டியை ஆபரணமாக இடுப்பில் அணிந்து, வளதடி அப்படிங்கிற ஒரு ஆபரணம் அதாவது ஒரு ஆயுதம் முன்னர் வளரி என்ற பெயரில் தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்காங்க ஜப்பானியர்கள் பூமராங் என்ற பெயரில் இதை பயன்படுத்தி வந்திருக்காங்க அப்படிப்பட்டஒரு பழமையான ஆயுதம் அதேபோல காதில் வண்டு கடுக்கண் அணிஞ்சிருக்காரு நெற்றியில் சிங்கமுகத்துராய் அப்படிங்கற ஒரு சிறிய குத்தீட்டு அதாவது திருமுடியில் சாத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது தற்போது வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டுக முனி மற்றும் இந்திரனுக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக காத்திருக்கும் கள்ளழகரை வழி நெடுகிலும் மண்டக படிகளை வைத்து பக்தர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய இருக்காங்க அதேபோல கருப்புசாமி வேடமனிந்து திரி ஏந்தி தங்களை சாட்டையால் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தக்கூடிய பக்தர்களையும் மற்றொருபுறம் நம்மால் காண முடிகிறது இந்த சித்திரை பெருவிழாவில் பரமக்குடி வைகை ஆறு முழுவதும் சாதி மத பேதங்களைக் கடந்து கள்ளழகரை காண விண்ணதிர கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு கண்ணில் ஆனந்த கண்ணீருடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS