பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
60 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பேயாற்று பகுதியிலும் வெட்டுவானம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான பாட்டை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் குமரவேல் பாண்டியன் ;-
கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த சாலைகள் செப்பனிடும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என வரப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது அந்த கால்வாய்களை இன்னும் ஓரிரு தினங்களில் தூர்வார பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று வெட்டுவானம் பகுதியில் உள்ள 11 குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வேண்டி மனு அளித்திருந்தனர் அதனடிப்படையில் அப்பகுதியில் பார்வையிடப்பட்டது.
மனு அளித்தவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தீர்மானம் இயற்றப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்க தசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விரிஞ்சிபுரம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர் எவ்வாறு சென்று கொண்டுள்ளது என்பதை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதேபோன்று மாவட்டத்தில் 65 முதல் 70 சதவீதம் வரையிலான நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுவிட்டன. இருப்பினும் அவற்றில் மீண்டும் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அவற்றை 100 நாட்கள் வேலை திட்ட பணியாளர்கள் கொண்டு அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நீர் வரத்து கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு பொதுமக்கள் கடைப்பிடிக்கின்றனரா என உள்ளாட்சித் துறை அமைப்புகள் சரிவர கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள 60 சதவீத ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது அதே போன்று பாலாற்று நீர் மூலமாக நிரப்பப்படும் அத்தனை ஏரிகளும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறைந்த அளவே மீட்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க நிலம் தேர்வு செய்யப்படுவதால் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறைந்த அளவில் மீட்கபட்டுள்ளது.
நீர் நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் நிலங்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது இதுவரை மாவட்டத்தில் சுமார் 50 சதவீத அளவிற்கான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா கட்டுப்புடி சாலையில் பெரிய ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாயில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சாலைகள் சேதம் அடைந்துள்ளது பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் பொதுப்பணி துறையின் மூலம் தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது பணிகள் விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், டி. எஸ். ஒ பழனி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.