BREAKING NEWS

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்  போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி ,கலியனூர், குப்பாண்டாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் வாழைக்காய் கொள்முதல் செய்து வந்தார்.

அப்படி கொள்முதல் செய்யும் வாழைக்காய்க்கு ஒரு சில மாதங்கள் கழித்து பணம் தருவது வழக்கமாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் வெட்டிய வாழைக்காய்க்கு சுரேஷ் சரியான முறையில் பணம் தந்ததால் அதை நம்பிய அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் தோட்டத்தில் உள்ள வாழைக்காயை சுரேஷ் வெட்டி செல்வதற்கு அனுமதி அளித்தனர்.

சுமார் 30 லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய வாழைக்காய் கொள்முதல் செய்த சுரேஷ் விவசாயிகளுக்கு பணம் தராமல் ஒரு வருட காலமாக தலைமறைவானார்.

இந்நிலையில் குப்பாண்டம்பாளையம் சின்னசாமி என்பவர் தோட்டத்தில் சுரேஷ் வாழக்காய் வெட்டி வருவது தெரிந்து அப்பகுதி சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு சென்று வெட்டிய வாழக்காய் வண்டியை சிறை பிடித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வண்டி அனுப்பி வைத்தனர். அதன் பின் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வரும் பொழுது.

வாழைக்காய் வண்டியை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் கேட்கும் பொழுது வண்டியை அனுப்பி விட்டதாக அவர்கள் கூறியதை அடுத்து கொந்தளித்த விவசாயிகள் நாங்கள் வராமல் வண்டியை நீங்கள் எப்படி அனுப்பலாம், இப்பகுதியில் உள்ள 40க்கு மேற்பட்ட விவசாயிகளிடம் 30 லட்சம் மேற்பட்ட வாழைக்காய் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றி நபரை எந்த விசாரணையும் இல்லாமல் அனுப்பியதற்கு காரணம் என்ன என காவல் நிலையத்தை உற்று கேட்டு போலீசாரிடம் வாக்கு வருவதில் ஈடுபட்டனர்.

அதன் பின் போலீசார் வாழைக்காய் வண்டியை மீண்டும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது

Share this…

CATEGORIES
TAGS