பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது
விதி மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது
சென்னை அடுத்த குன்றத்தூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற தனியார் பள்ளி ஒன்றின் புது கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் தா.மோ அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமைச்சர் திறந்து வைத்த அந்த பள்ளி கட்டிடம் விதி மீறி கட்டப்பட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பள்ளி கட்டிடடம் கட்டுவதற்கான முறையான சான்றை பெறாமலும் கோவில் இடத்தை ஆக்கிரமித்தும் அந்த கட்டிடடம் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சி.பி.எஸ்.சி பள்ளி என விளம்பரம் செய்து மெட்ரிக் வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும்,மெட்ரிக் தேர்வு சான்றையே பள்ளி நிர்வாகம் வழங்குவதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் சமாதானம் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக பள்ளியை முழுவதுமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கினறனர். விதி மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் பள்ளி கட்டிடத்தை அமைச்சரே திறந்து வைத்து இருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது