பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு பல்வேறு நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுந்தரேஸ்வரர் பார்வதி கங்கா தேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.