பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகளான வெங்கடேஸ்வரன், ஈஸ்வரன், அழகப்பன், சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் வெங்கடாசலம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கோட்டையன், மாவட்டத் துணைச் செயலாளர்களான ஆண்டவர், நடராஜ், சண்முகம், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளான நாகப்பன், பிரபாகரன், முருகன், துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தியும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இறுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பவானி நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் நன்றி கூறினார்.