பவானியில் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் தலைமை வகித்தார். பவானி நகர செயலாளர் ப.சீ. நாகராசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் K.A.சேகர் நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஆயத்த மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர திமுக கட்சி நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணியினர் மற்றும் சார்பு அணியினர் கழக உடன்பிறப்புகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பவானி நகர இளைஞர் அணி அமைப்பாளர் இந்திரஜித் செய்து இருந்தார்.