பாபநாசத்தில் தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் .

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார், துணை ராணுவத்தினர் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது .
பாபநாசம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு பாபநாசம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிந்தது .
இதில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
