பாபநாசத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தஞ்சை மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, திருப்பாலைத்துறை ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில் ரமலான் நோம்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆப்தீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஓஎஸ்ஜெ அறக்கட்டளை நிர்வாகி காஜாமைதீன் கலந்து கொண்டு இஸ்லாமிய ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், துணி மணிகள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், அம்மாபள்ளி தைக்கால், சோழபுரம் மற்றும் பாபநாசம் பகுதியை சேர்ந்த 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓஎஸ்ஜெ அறக்கட்டளை நிர்வாகிகள், ஆப்தீன் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாவட்டம்
