BREAKING NEWS

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக எழுந்த புகாரின் பேரில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு வாக்கு சாவடி மையத்தில் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் 185 வாக்கு சாவடி உள்ளது. இதில் 542 பேர் வாக்களித்து கொண்டிருந்த நிலையில், இறந்து போனவர்கள் மற்றும் வெளியூர் காரர்கள் என சிலரின் ஓட்டை கள்ள ஓட்டாக சிலர் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. பாமக பூத் ஏஜெண்ட்கள் எழுப்பிய புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்த அரக்கோணம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே,பாலு, வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.

தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் இதனால் இந்த வாக்கு சாவடியில் வாக்குப்பதிவை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரிகள் ஒத்துழைக்காததால் திடீரென சக நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் தலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், காலை முதல் தனக்கு ஏராளமான பொதுமக்கள் வாக்களித்து வருவதாகவும், ஆனால் பல்வேறு வாக்கு சாவடிகளில் முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் முறைகேடு நடைபெற்று இருப்பது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதனை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மறுவாக்குபதிவு நடைபெற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS