பாம்பு குறுக்கே சென்றதால் மேலே ஏற்றாமல் இருக்க லாரி ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
திட்டக்குடி அருகே பாம்பு குறுக்கே சென்றதால் மேலே ஏற்றாமல் இருக்க லாரி ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வ.சித்துர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது செங்கல் சூலை இருந்து தனக்கு சொந்தமான டிப்பர் லாரியில் செங்கல்களை ஏற்றிக்கு கொண்டு அவரது மகன் பிரகாஷ் வயது 42 என்பர் பெண்ணாடம் நோக்கி செல்லும் போது வாகையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பாம்பு குறுக்கே வந்துள்ளது அப்போது முன்னாள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபர் நிறுத்த முயன்ற போது அவர் மீது டிப்பர் லாரி ஓட்டுனர் பிரகாஷ் பிரேக் அடித்து போது செங்கல் ஏற்றி சென்ற சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிப்பர் லாரி மீது அமர்ந்திருந்த கீழ்கல்பூண்டியை சேர்ந்த லெஷ்மி வயது 35 மற்றும் அஞ்சலை 40 மற்றும் ரேவதி வயது 36 மற்றும் தாயம்மாள் வயது 34 ஆகிய நான்கு பேர் மீதும் செங்கல்கள் விழுந்து சிக்கிக்கொண்டனர். எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாகையூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய்காந்தி மற்றும் ஜெயச்சந்திரன் இருவரும் கவிழ்ந்து லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தனர் இருவரையும் பொது மக்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சாம்பவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்