BREAKING NEWS

பாயும் நெருப்பே… பாதாள நெருப்பே… சூர்யா பிறந்தநாளில் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு!

நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் (Fire Song) என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் (Fire Song) என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே, மாய நெருப்பே மலை நெருப்பே… பாயும் நெருப்பே பாதாள நெருப்பே, காவல் நெருப்பே காட்டு நெருப்பே… என உடுக்கு முழக்கத்துடன் ஒலிக்கிறது.

Share this…

CATEGORIES
TAGS