BREAKING NEWS

பார்மசி,பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம்,சயின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

 

 

 

 

டாக்டர. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுவதை, மருத்துவம் சாரா மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்
பார்மசி, பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம், சயின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமி பார்மசி, பிசியோதெரபி மற்றும் ஹெல்த் சயின்ஸ் ஆகிய படிப்புகளை படித்து முடித்த 222 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றி பேசினார்.

அப்போது பேசிய அவர், இது ஒரு முக்கியமான நாளாக இருந்தாலும் நீங்கள் இந்த நிலைக்கு வந்ததை எண்ணி பார்க்க வேண்டும். பெற்றோர்களின் உழைப்பை நீங்கள் உங்களின் கல்வி வெற்றி பெற்றதற்கு உங்கள் பெற்றோர்களின் பங்கு இன்றியமையாததாகும். உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக போற்றப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.

தற்போது படித்து முடித்துள்ள நீங்கள், மேல்படிப்பிற்கு செல்வதா? வேலைக்கு செல்வதா என்று ஐயம் இருக்கலாம்.

முன்பு எல்லாம் ஒரே மருத்துவர் அனைத்து சேவைகளையும் வழங்குவார். ஆனால், இப்பொழுது மருத்துவத்துறை பெரிதும் வளர்ந்து விட்டது. அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத கூட்டு முயற்சியாக செவிலியர், மருந்தாளுநர், மருத்துவம் சாராத பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மருத்துவ சேவை வழங்க வேண்டும். எனவே உங்களைப் போன்றவர்கள் இருந்தால் தான் மருத்துவ உலகம் முழுமை பெறும். மருத்துவத்துறையில் மருத்துவம் சாராதவர்களும் ஒரு தூணாக விளங்குகிறார்கள். படிப்பு மற்றும் பயிற்சி சிறப்பாக்குவதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

மருத்துவத்துறை தேர்ந்தெடுத்துள்ள நீங்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளும் அதிகமாக வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தில், 3 மாத பார்மசிஸ்ட், என்ற ஆராய்ச்சி படிப்பு கல்வி உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இது போன்ற ஆராய்ச்சி படிப்புகளையும் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உயர்ந்திருக்கிற தொழில்நுட்பத்தை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனித்திறமை மட்டுமல்லாது ஆர்வம் உள்ளவர்களும் எல்லா துறையிலும் சாதிக்க முடியும். உங்கள் ஆர்வத்தை வாழ்வாக்கி வாழ்க்கையில் உயர வேண்டும் என்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.கே. நடேசன், துணைத் தலைவர் – செயலாளர் டாக்டர் என். மதன் கார்த்திக், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS