BREAKING NEWS

பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை பால்வளத்துறை சார்பில் தோரணக்கல்பட்டில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ 264.27 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன புதிய பால் பண்ணையை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்

இதன்படி, கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 144 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 71 ஆயிரத்து 25 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதால் 4241 பால் ஊற்றும உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் நவீன பால் பதப்படுத்தும் இயந்திரம், பால் பாக்கெட் இயந்திரம் மற்றும் குளிரூட்டும் அறை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது

இதனால் கரூர் ஒன்றியத்தில் கொள்முதலும் விற்பனையும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பால் ஊற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பாக தோரணக்கல் பட்டி ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் , , மேயர் ஆகியோர் பங்கேற்று குத்து விளகேற்றி புதிய பதப்படுத்தும் இயந்திரத்தை தொடங்கி வைத்தனர்.

CATEGORIES
TAGS