BREAKING NEWS

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

ஈரோட்டில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்பி., கனிமொழி,

தமிழக மக்களின் தந்தையான பெரியாரின் வீட்டிற்கு வந்துள்ளேன்.

அரசியலை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி குளிர்காய நினைப்பவர்களுக்கு பெரியார் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

தந்தை பெரியாரின் சிலைக்கு
தற்போதும் பெரியாரை நாங்கள் மறக்கவில்லை என்பது போல நீங்களும் மறக்கவில்லை.

தந்தை பெரியாரின் கருத்துக்களை மையமாக வைத்து திராவிட மாடல் ஆட்சியை கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.

கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது கொண்டுவரப்பட்டது. பெண்களுக்காக சிந்தித்தவர் கலைஞர்.

கலைஞரின் வழியில் வந்த மு.க ஸ்டாலின் பெண் குழந்தைகள் கல்லூரிக்கு செல்வதற்கு எந்தவித தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தந்தையாக அண்ணணாக புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை மேடையில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS