பிரபல மாடல் அழகி ஷெரின் தூக்கிலிட்டு தற்கொலை!
பிரபல மாடல் அழகி ஷெரின் தூக்கிலிட்டு தற்கொலை!
கேரளாவில் அடுத்தடுத்து அழகிகள், மர்மமான முறையில் மரணமடைந்து வருவது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து இளம் நடிகைகளும், மாடல் அழகிகளும், திருநங்கைகளுமாக மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். யூகங்களின் அடிப்படையில் அந்த மரணங்கள் தற்கொலைகளாக கருதப்பட்டாலும், கேரள போலீசார், அவர்ற்றை சந்தேக மரணம் என்று தான் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மரணமடைந்த மாடல் அழகி ஷெரினின் மரணத்தையும் சந்தேக மரணம் என்று தான் போலீசார் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகையும், மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ, கொச்சியில் உள்ள விடுதி அறை ஒன்றில், தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் நடிகையும், மாடலுமான திருநங்கை ஷெரின், தனது விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 27.
தனது துணையுடன் சில பிரச்சனைகள் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக செலின் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் செலினின் நண்பர்கள் கூறுகின்றனர்.
சக்கரப்பரத்தில் உள்ள அவரது அறையில் நடிகை ஷெரினின் இறந்து கிடந்தார். ஆலப்புழா, குட்டநாட்டைச் சேர்ந்த நடிகை ஷெரின், பல ஆண்டுகளாக கொச்சியில் வசித்து வருகிறார். தனது துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாகவே ஷெரின் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது என்றும் செலினின் நண்பர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 10 மணியளவில் (செவ்வாய்க்கிழமை) நடிகை ஷெரின் சடலமாக மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார், ஷெரினின் மரணத்தை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஷெரினின் அறையில் இருந்த மொபைல் போன் மற்றும் பிற பொருட்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
கொச்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 திருநங்கைகள் இப்படி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.