BREAKING NEWS

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.

திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதலே பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி தரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் சின்னகாஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

குறிப்பாக மாணவிகளின் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில், பள்ளிகளில் கூடுதல் கழிப்பறைகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் டிஎம்எஸ் அரசு மகளின் மேல்நிலைப் பள்ளியில் அதிநவீன வசதிகளின் கூடிய கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கழிப்பறை வளாகத்தில் நவீன முறையில் தானே இயங்கி வசதியுடன் சுத்தம் செய்யும் 20 கழிப்பறையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கழிப்பறையும், நாப்கின் எரிக்கும் அறை , தானியங்கி முறையில் கை கழுவும் வசதி என பல வசதிகளும் சென்சார் முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்சார் தொடர்ச்சியாக இயங்கும் வகையில் பேட்டரி மற்றும் 1 கே.வி சோலார் அமைப்புகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கழிவறை வளாகத்தினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்து நவீன வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கழிப்பறை நோய் தொற்று அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் அதிநவீன வசதிகள் கொண்ட இந்த வளாகம் அரசு பள்ளியில் மேற்கொண்ட முயற்சிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS