பீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பாக தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் குவாகம் கிராமத்தில் விழிப்புணர் நிகழ்ச்சி
ஆகஸ்ட் 1ந் தேதி முதல் 7 தேதி வரை தாய்ப்பால் தினம கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பாக பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வை மக்களிடம் சேர்க்கும் விதமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கீதா மணிவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பீனிக்ஸ் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் உரையாற்றினார் குவாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் காவலர் கேசவன்ஆகியோர் கலந்து கொண்டனர். குவாகம் காவல் நிலைய வளாகத்தின் வைத்து இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது .
சுமார் 1https://youtu.be/RKPbIiaAFAs00க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை பீனிக்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த பரமசிவம் ஏற்பாடு செய்தார்