BREAKING NEWS

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்காக பெங்களூர், சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் பங்கேற்றுள்ளன.

முக்கிய போட்டியான நீலகிரிஸ் டெர்பி இன்று நடைபெற்றது.

1600 மீட்டர் தூரம் கொண்டு இந்த பந்தயத்தில் 11 குதிரைகள் பங்கேற்றன.இந்த போட்டிக்கு பரிசு தொகையாக ரூ.77 லட்சம் அறிவிக்கப் பட்டிருந்தது. வெற்றி பெறும் குதிரையின் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் ரூ.38 லட்சத்து 11 ஆயிரத்து 500, பயிற்சியாளருக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம், ஜாக்கிக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.14 லட்சத்து 61 ஆயிரத்து 75, மூன்றாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்த குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS