BREAKING NEWS

புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக  முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்ப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த துணை மின் நிலையம் 70 எம்.வி.ஏ திறன் கொண்ட 110/33/11 கிலோவாட் கொண்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர்.

பூண்டி ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன் பிறகு 75 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் வசித்து வரும் வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த 11 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு அதற்கான மின் அட்டையை கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சற்குணம் உதவி பொறியாளர் குமரகுரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி லோகேஷ் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் கோல்டுமணி பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மாவட்ட கவுன்சிலர் சுதாகர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன்
உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS