புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம்.

மாதந்தோறும் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம், ஐந்து சவரன் நகை அடகு வைத்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி,
புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம் சாட்டி
கடமலைக்குண்டு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் பேச்சு
கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து சென்ற பெண்கள் உள்ளிட்டோரை பேசி அமர செய்த அதிமுகவினர்
பணம் கொடுப்பதற்கான டோக்கன் வழங்குவதாக ஒவ்வொருவரின் பெயரையும் நோட்டில் குறித்துக்கொண்டு கடைசி வரை அமர வைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது
தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன் பேசுகையில்
மாதந்தோறும் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் ஐந்து சவரன் நகை அடகு வைத்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான வாக்குறுதிகளை தொடர்ந்து திமுக அளித்து வருவதாகவும் இதே கடமலைகுண்டு, வருசநாடு பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வன விவசாயிகளுக்கு இது வரை திமுக அரசு எந்த பாதுகாப்பும் அளிக்கவில்லை என்றும்
மக்கள் விரோத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்சி பேசினார்.
இந்தக் கூட்டம் துவங்கி சில மணி நேரத்திலேயே கூட்டத்திலிருந்து பெண்கள் கிளம்பிய நிலையில் அங்கு சென்ற அதிமுக கட்சியினர் சிலர் ஒவ்வொருவரையும் பேசி அமரச்செய்து அங்கேயே நின்றிருந்தனர்
பின்னர் முடியும் தருவாயில் வந்திருந்த அனைவரது பெயர்களையும் பணம் கொடுக்க டோக்கன் வழங்குவதாக
நோட்டை எடுத்து
குறித்து கொண்டு அனுப்பி வைத்தனர்.