BREAKING NEWS

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாப் போராட்டம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாப் போராட்டம்.

தஞ்சாவூர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்ற தர்ணாப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.செல்வி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் துவக்கவுரையாற்றினார்.


போராட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு மற்றும் கரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடன் வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து ஒப்பந்த மற்றும் வெளிமுகமை, தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முன் வைத்து பேசினர்.


இறுதியாக சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஹேமலதா நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் டி.ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )