புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அமலக்கத்துறையினர் அதிரடி சோதனை,
புதுக்கோட்டையில் தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வரும் நிலையில் புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.