புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது.
அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ராமராஜ் என்பவர் வீடு தரமின்றி கட்டிக் கொடுத்ததால் தற்போது வீட்டின் மேற்குறை பால் சீலிங் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த கோவிந்தன் அவரது மனைவி காசாம்பால் மற்றும் சிறுவன் உள்ளிட்ட 3 நபர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இவை வெயிலின் தாகத்தாலும் வீழ்ந்து இருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே தரமின்றி கட்டப்பட்ட வீட்டை கட்டியதால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தரமின்றி வீடு கட்டிய காண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
CATEGORIES விழுப்புரம்