புனித சுமதி நாத் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு, தங்க குடை அமைத்து பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித சுமதி நாத் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு, தங்க குடை அமைத்து பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 500க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுடைய முக்கிய வழிபாட்டு ஸ்தலமாக மயிலாடுதுறையில் புனித சுமதி நாத் ஆலயம் அமைந்துள்ளது.ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.சுமதி நாத் சிலைக்கு தங்க இழைகளால் வடிவமைக்கப்பட்ட பட்டுக் குடை அமைத்து வழிபாடு செய்தனர்.பஜனை பாடல்கள் பாடியும், மங்கள ஆரத்தி எடுத்தும், கவரி வீசியும், மலர்கள் இனிப்புகள் ஆகியவற்றை அர்ப்பணித்து நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பஜனை பாடலின் போது வந்திருந்த பக்தர்கள் மெய் மறந்து கைதட்டி ஆடிப்பாடி சுமதி நாத் சுவாமியை வழிபாடு செய்தனர்