புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழா மற்றும் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது
உத்தமபாளையம் அருகே 123 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழா மற்றும் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது – எம் எல் ஏ, எம் பி உட்பட ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் தேர்வடம் படம் பிடித்து இழுத்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித பனிமய அன்னை திருத்தலம் 123 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும்.
பழமை வாய்ந்த இந்த புனித பனிமய மாதா ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்துவ இறை மக்களும்,சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாலயம் அமையப்பெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இறைமக்கள் ஒன்று சேர்ந்து புனித பனிமய மாதா ஆலய பெருவிழா
மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த திருவிழாவின் போது பனிமய மாதா சிலை சப்பரத்தில் வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு இத்திருத்தலத்தின் திருத்தேர் ஒன்று புதிதாக அமைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தேர் மாதாவிற்கின தனி மிக உயரமான தேர்களின் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான
புனித பனிமய மாதா ஆலய பெருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் புனித ஆராதனைகளும், திருப்பலிகளும் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து
இன்று புனித பனிமய அன்னை
திருத்தலம் பெருவிழா மற்றும் திருத்தேர் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
மதுரை உயர் மறை மாவட்டப் பேராயர்
மேதகு Dr. அந்தோணி பாப்பு சாமி மற்றும் பங்கு தந்தை ஞானப்பிரகாசம் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனைகள் திருப்பலிகள் உள்ளிட்டவை நடத்தினார் பின்னர்
புதியத்தேரை புனிதப் படுத்தி தேரடி திருப்பலி செய்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என பங்கேற்றனர் இத்திரு தேர் இராயப்பன்பட்டி முக்கிய வீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது.