BREAKING NEWS

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.

பாராளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.

தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான பிரகாஷ் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளான முனியப்பன் கோயில், உப்புபாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் பெண்கள் திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதியாக புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் எனவும் ஐந்து மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் பொது மக்களிடையே பேசினார்.

Share this…

CATEGORIES
TAGS