BREAKING NEWS

புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா

புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் தொழில் அதிபருமான எஸ்.ஆர்.ரங்கநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனர் எஸ். பூவரசன் தலைமை தாங்கினார்.

தலைவர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார், துணைத் தலைவர் சத்தீஸ்வரன், பொருளாளர் கௌசல்யா, செயலாளர் கீர்த்திகா மற்றும் உறுப்பினர்கள் ஜெகதீஷ், கோவிந்தராஜ், ரமேஷ், காளிதாஸ், மாரியப்பன் , தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புளியம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அம்மன் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் விவேகநந்தன், போச்சம்பள்ளி காமராஜ் அகடாமி தலைவர் கௌதம், ஆசிரியர்கள் மனோகரன், சுகுமார்,முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், டாக்டர் பிரபாகரன், டாக்டர் பிரதீஷ் ராஜன், தீயணைப்பு ராஜேஷ், வணிகர் சங்க செயலாளர் தம்பிதுரை,டிரைவர் வடிவேல், உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

CATEGORIES
TAGS