பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்கள் பறிமுதல்.
பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காளி இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் தேக்கு மரங்களை செங்குன்றம் வனச்சரக சித்தஞ்சேரி வன அலுவலக காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை. உரிய அனுமதி இன்றி தேக்கு மரக் கட்டைகள் எடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீத்தஞ்சேரி வன அலுவலர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தேக்கு மரக் கட்டைகள் இருப்பதாக செங்குன்றம் வனச்சரக சித்தேரி வன அலுவலக காவலர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதியின்றி கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் தேக்கு மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதை அடுத்து விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இல்லை எனவும் மேலும் ஊத்துக்கோட்டை பகுதி நாகலாபுரம் சாலையில் உள்ள தனஞ்செயன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் தெரிவித்ததன் அடிப்படையில் தனஞ்செழியன் அவர்களுக்கு உரிய ஆவணங்கள் அளிக்குமாறு நோட்டிஸ் வழங்கப்பட்டு மூன்று தினங்களுக்கு மேல் ஆன நிலையில் முறையான ஆவணங்கள் காண்பிக்கப்படாததால் சித்தஞ்சேரி வன அலுவலர் கிளமெண்ட் எடிசன் அவர்கள் தலைமையிலான வனத்துறையினர் 10 டன் தேக்கு மரக் கட்டைகளை பறிமுதல் செய்து சித்தஞ்சேரி வன அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேக்கு மரக் கட்டைகளின் உரிமையாளர்கள் முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட்டால் தேக்கு மரக் கட்டைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஆவணங்கள் காண்பிக்கப்படாத பட்சத்தில் செங்குன்றம் வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டும் எனவும் சீத்தஞ்சேரி வன அலுவலர் தெரிவித்துள்ளார் மேலும் இதுபோன்று உரிய ஆவணங்கள் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக கேரள கர்நாடக மாநிலங்களில் இருந்து தேக்கு மரக் கட்டைகள் தமிழகத்திற்குள் எடுத்து வருவதாகவும் இதுபோன்று தேக்கு மரக் கட்டைகள் உரிய ஆவணங்களின்றி திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டால் தேக்கு மரக் கட்டைகளை பறிமுதல் செய்து நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேக்கு மரக் கட்டைகளை எடுத்து வரும் நபர்கள் உரிய அனுமதி பெற்று எடுத்து வர வேண்டும் என சித்தஞ்சேரி வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்