BREAKING NEWS

பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் விஜயகுமார் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் நிலம் வரன்முறைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை இன்று பிற்பகல் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர் சுனில்குமார் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக விஜயகுமாரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தமிழ் அரசு தலைமையிலான போலீசார் ரூ. 5 ஆயிரத்தை விஜயகுமார் கையில் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS