பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் தங்களுடைய சொந்தப் பகுதிகளில் கிடைக்கும் சத்துள்ள சிறுதானியங்களைக் கொண்டு செய்த உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டு வந்தனர். அதில் போட்டி நடத்தப்பட்டு அனைவருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ஆரோக்கியசாமி பரிசுகளை வழங்கினார். மதர் தெரசா தொடு நிறுவனத்தின் இயக்குனர் ராமர், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உமா மகேஸ்வரி, கீழப்பெரும்பள்ளம் களப்பணியாளர் ஆனந்தி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு பிரிவு அலுவலர் ஜூலியஸ் தூய மணி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.