பூலித்தேவர் 308வது பிறந்தநாள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை
கோவில்பட்டியில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு முன்னால் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழாவையொட்டி கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் வெயிலுமுத்துபாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை ஆகியோர் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வட்டார அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,கவியரசு, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் நாகராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, அம்பிகா பாலன்,பத்மாவதி,கோமதி, அல்லித்துரை, குழந்தை ராஜ்,ஜெய் சிங்,கோபி,முருகன், அங்குசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்
மாமன்னர் புலித்தேவனுக்கு அரசு விழா கொண்டாட வேண்டும் என்று ஒரு குறை இருந்தது அந்த குறையை எப்பொழுது நிவர்த்தி ஆனது என்றால்
கடந்த 2016 அதிமுக ஆட்சியில் நான் கோவில்பட்டியில் முதல்முறையாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும்போது மாமன்னர் புலித்தேவனுக்கு அரசு விழா கொண்டாட வேண்டும் என்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர் அந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறினேன் பின்னர் சட்டமன்றம் முடிந்த பிறகு நான் என் அறைக்கு சென்ற போது சரியாக 3-15 மணி அளவில் அம்மா அவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி மாமன்னர் பூலி தேவனுக்கு இந்த ஆண்டு அரசு விழா நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு அம்மாவின் கையெழுத்திட்டு பிறகு நான் அந்தத் துறை அமைச்சராக இருந்த நான் அந்த அரசு விழாவுக்கு முதல் கையெழுத்தை போடுவதற்கு எனக்கு வாழ்நாளில் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். அந்த வகையில் பெருமை சேர்த்த அரசு அம்மாவின் அரசு அது எனக்கு மிகப் பெருமையாக உள்ளது. மேலும் கோவில்பட்டியில் முதல் முறையாக அமைச்சராக நியமித்தார்கள். என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்று பேசினார்.